நிலப்பிரச்சனை குறித்து விசாரணைக்கு சென்றவர் மீது தாக்குதல் ; சூரங்குடி காவல்நிலைய உதவி ஆய்வாளர் மீது பரபரப்பு புகார்..!!

Author: Babu Lakshmanan
9 June 2023, 9:08 am

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்றவர் மீது உதவி ஆய்வாளர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எம் சண்முகபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கும், சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்த அழகு முருகேசன் என்பவருக்கும் நிலப் பிரச்சனை இருந்து வந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீதான விசாரணை சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரம் தலைமையில் சூரங்குடி காவல் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

விசாரணைக்காக அழகு முருகன் உடன் அழகு முருகனின் சகோதரர் ராஜகனி என்பவரும் விசாரணைக்கு வந்தார். அப்போது, காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் ராஜகனி என்பவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் ராஜகனியை தள்ளி விட்டு தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் ராஜகனி காயம் அடைந்து தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

  • Sivakarthikeyan New Message to fans on his birthday ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்… பிறந்தநாளன்று சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு!
  • Svg%3E