ஆர்டிஐ சட்டத்தில் கேள்வி கேட்ட சமூக ஆர்வலரை வீடு புகுந்து அழைந்து சென்ற காவல்துறை : காவல் ஆய்வாளர்கள் மீது மனித உரிமை ஆணையம் ஆக்ஷன்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 June 2022, 2:11 pm

ஆர்டிஐ சட்டத்தில் கேள்வி கேட்ட சமூக ஆர்வலரை நள்ளிரவில் வீடு புகுந்து அழைத்துச்சென்று விசாரித்த சம்பவம்த்தில் கோவை காவல் ஆய்வாளர்களுக்கு மனித உரிமை ஆணையம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

கோவை மதுக்கரை அருகே உள்ள திருமலையம்பாளையம் வார்டு 2ல் கவுன்சிலராக உள்ள ரமேஷ், கடந்த 2019 ஆம் ஆண்டு திருமலையம்பாளையம் பேரூராட்சியில் திட கழிவுகள் மேலாண்மை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டிருந்தார்..

இதற்கு ஆரம்பத்திலிருந்தே மிரட்டல்கள் வந்துள்ளது. இந்த நிலையில் சில நாட்களில் சமூக ஆர்வலர் ரமேஷ் வீட்டிற்கு நள்ளிரவில் வந்த மதுக்கரை காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி, வடவள்ளி காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் , மற்றும் க.க.சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்த் குமார் ஆகியோர் சட்டவிரோதமாக சமூக ஆர்வலரை வீட்டிலிருந்து அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்..

இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர் ரமேஷ் மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட மாநில மனித உரிமை ஆணையம் காவல்துறை அதிகாரிகள் 3 பேர் மீதும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது..

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!