மத்திய மண்டலத்தில் இதுவரை 17528 -வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17,757 -பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மத்திய மண்டல காவல்துறைக்குட்பட்ட மாவட்டங்களான திருச்சி. புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள். பதுக்கி வைப்பவர்கள் மற்றும் கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சம்பந்தபட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்துவதுடன் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் காவலுக்கு உட்படுத்தப்படுவார்கள். மத்திய மண்டல காவல்துறைக்குட்பட்ட மாவட்டங்களில் கடந்த 01.01.24 முதல் 20.06.24 வரை மது சம்பந்தமான குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களின் மீது மத்திய மண்டலத்தில் 17528 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17,757 பேர் கைது செய்யப்பட்டும். 1,45,111லிட்டர்கள் சட்டவிரோத மது வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக திருச்சி மாவட்டத்தில் 1232 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1237 பேர் கைது செய்யப்பட்டும், 2672 லிட்டர் சட்டவிரோத மது வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 1763 வழக்குகளும். 1766 பேரும், 3379 லிட்டர் மது வகைகளும். கரூர் 2910 வழக்குகளும், 2914 பேரும், 2666 லிட்டர் மது வகைகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் 809 வழக்குகளும், 829 பேரும், 2575 லிட்டர் மது வகைகளும், அரியலூர் மாவட்டத்தில் 1395 வழக்குகளும், 1418 பேரும், 2699 லிட்டர் மது வகைகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2781 வழக்குகளும், 2838 பேரும், 6501 லிட்டர் மது வகைகளும், திருவாரூர் மாவட்டத்தில் 3289 வழக்குகளும், 3325 பேரும், 11624 லிட்டர் மது வகைகளும், நாகப்பட்டிணம் மாவட்டத்தில் 1306 வழக்குகளும், 1372 பேரும், 54907 லிட்டர் மது வகைகளும் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 2043 வழக்குகளும், 2058 பேரும், 58448 லிட்டர் மது வகைகளும் பறிமுதல் செய்யப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மண்டலத்தில் கடந்த 2நாட்களில் (19.06.24 மற்றும் 20.06.24) மட்டும் மொத்தமாக 342 வழக்குகள் செய்யப்பட்டுள்ளது (திருச்சி 41, புதுக்கோட்டை 49. கரூர் 50, பெரம்பலூர் 38, அரியலூர் 15, தஞ்சாவூர் 60, திருவாரூர் 48, நாகப்பட்டிணம் 20 மற்றும் மயிலாடுதுறை 21) மேலும், தொடர் குற்ற செயல்களில் ஈடுப்பட்ட 13நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய மண்டல காவல்துறைக்கு உட்பட்ட மாவட்டங்களில் இரவு பகல் எல்லா நேரங்களிலும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கள்ளசாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் மற்றும் கடத்துதல் போன்ற குற்ற செயல்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மத்திய மண்டல காவல்துறைக்குட்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அனைவருக்கும் மது சம்பந்தப்பட்ட குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டபடியான கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தக்க அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.