காலேஜ் பசங்களால ரொம்ப தொல்லை… மக்கள் புகார் : அதிரடி ரெய்டில் இறங்கிய கோவை போலீசார்!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2024, 2:36 pm

கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கின்ற பகுதிகளில் போதை பொருள் பயன்படுத்திவிட்டு குற்ற செயல்களில் ஈடுபடுவதாக கோவை போலிசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் 60 போலீசார் கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் பல்வேறு இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

கல்லூரி மாணவர்கள் தங்கும் இடங்களில் வேறு யாரேனும் தங்கி இருக்கின்றார்களா? வேறு ஏதேனும் சட்ட விரோத பயன்பாட்டு பொருட்கள் இருக்கின்றனவா என சோதனையிட்டனர்.

மேலும் படிக்க: திரைப்படங்களில் கேப்டன் போட்டோவை பயன்படுத்தினால் காப்புரிமை கேட்கமாட்டோம்.. மனமாறிய பிரேமலதா!

காவல் ஆய்வாளர்கள் கந்தசாமி, அருண், ராஜேஷ், முத்துலட்சுமி, தௌலத் நிஷா, பிரான்சிலின், சரவணன், உதவி ஆணையர் பார்த்திபன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு இருக்கின்றனர்

பீளமேடு, சரவணம்பட்டி, ஈச்சனாரி போன்ற பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் அறைகளில் அதிகாரிகள் சோதனை இட்டு விவரங்களை சேகரித்து வருகின்றனர்

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 260

    0

    0