மதுரையில் காவல்நிலையத்திற்கு தீவைத்த சம்பவம்… காட்டிக் கொடுத்த சிசிடிவி… ஒருவர் கைது!!

Author: Babu Lakshmanan
15 மே 2024, 9:40 காலை
Quick Share

தமிழ்நாடு போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் நிலையத்திற்கு தீ வைத்த மர்ம நபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணுறிவு பிரிவு காவல் நிலையம் விஸ்வநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தல் விற்பனை தொடர்பாக வழக்குகள் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வரக்கூடிய வேளையில், வழக்கில் தொடர்புடைய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

இந்த நிலையில், கடந்த மாதம் கேகே நகர் பகுதியில் 5 கோடி மதிப்பில் மெத்தெபெட்டமைன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த தமிமும் அன்சாரி என்பவரை கைது செய்து, அவர் வைத்திருந்த இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்யப்பட்டு, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க: இளம்பெண்ணை மிரட்டி உல்லாசம்… வீடியோ எடுத்து மிரட்டி அடுத்தடுத்து பலாத்காரம் ; 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது!!

கடந்த 12 ஆம் தேதி இரவு 11.37 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் காவல் நிலைய வளாகத்திற்குள் உள்ள இருசக்கர வாகனத்தில் தீயை பற்ற வைத்த நிலையில், வாகனம் முழுவதுமாக எரிந்து நாசமாகியது. இதைத் தொடர்ந்து, இரவு 11.41மணி அளவில் அலுவலகத்தை விட்டு வெளியே செல்லக்கூடிய காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்ற மேத்தா என்பது தெரிய வந்த நிலையில் அவரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட அருண்குமார் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 304

    0

    0