Categories: தமிழகம்

திருநங்கையை காதல் திருமணம் செய்து அடித்து துன்புறுத்திய காவலர் : 110 சவரன், நான்கரை லட்சம் பணத்தை பறித்ததாக பரபரப்பு புகார்!!

உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணிபுரிந்து வரும் காவலர் தன்னை திருமணம் செய்து அடித்து துன்புறுத்தி 110 சவரன் நகை மற்றும் 4 லட்சத்து 50 ஆயிரம் பணம் பறித்துக் கொண்டதாக திருநங்கை பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் புதுப்பட்டி அரண்மனை தோட்டம் பகுதியை சேர்ந்த பபிதா ரோஸ் என்ற திருநங்கை உளுந்தூர்பேட்டை அடுத்த பாலி தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆய்வாளர் பாலகிருஷ்ணனிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார்

அந்த புகார் மனுவில் கடந்த ஏப்ரல் மாதம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலருக்கு உணவு ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தேன்.

அப்போது அங்கு பணியில் இருந்த உளுந்தூர்பேட்டை அடுத்த பாலி சிறப்பு காவல் படை காவலர் கடலூர் மாவட்டம் கீழ வன்னியூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 27)என்பவர் என்னிடம் பேசி எண் செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டு அடிக்கடி பேசி வந்ததாகவும் பின்னர், திருமணம் செய்து கொள்வதாக கூறி தொந்தரவு செய்தார்.

அப்போது நான் ஏற்கனவே திருமணம் செய்து பாதிக்கப்பட்டவள் என கூறி திருமணத்திற்கு மறுத்த போதும் என்னை விடாமல் தொந்தரவு செய்து திருமணம் செய்து கொள்வதாக கூறியதை அடுத்து கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி உறவினர்கள் முன்னிலையில் கார்த்திக்குடன் திருமண நடைபெற்றது.

அதன் பிறகு இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில் கார்த்திக்கு ஏற்கனவே திருமணம் ஆனது எனக்கு தெரிய வந்தது. இது குறித்து கேட்ட போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 11ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது என்னை கம்பியால் தாக்கி கட்டிப்போட்டு 110 பவுன் நகை மற்றும் ரூபாய் 4,50,000 பணம், செல்போன், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவைகளை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டதாகவும், படுகாயம் அடைந்த நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்று புகார் கொடுத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த புகார் மனுவில் தன்னிடம் பறித்துக் கொண்ட 110 சவரன் நகை மற்றும் ரூ. 4.50 லட்சம் பணத்தை பெற்றுத் தருமாறு அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

சிறப்பு காவல் படை காவலர் மீது திருநங்கை அளித்த புகார் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஜிவி தமிழ் சினிமாவின் பொக்கிஷம்…அனிருத் தாக்கப்பட்டாரா..பிரபல தயாரிப்பாளர் பேச்சு.!

கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…

2 hours ago

அந்த ஐட்டம் பாடலை நான் பாடி இருக்கக்கூடாது..ஓபனாக பேசிய ஷ்ரேயா கோஷல்.!

பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…

3 hours ago

நான் யாருனு காட்டுறேன்…நெருப்பை பற்றவைத்த ‘குட் பேட் அக்லி’ டீசர்.!

பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…

4 hours ago

ஆட்சியரின் முட்டாள்தனமான பேச்சுக்கு காரணமே முதலமைச்சர்தான்.. அண்ணாமலை கண்டனம்!

சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…

4 hours ago

‘குட் பேட் அக்லி’ யுனிவர்ஸ் படமா…அதை நீங்க கவனிச்சீங்களா மாமே.!

குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…

5 hours ago

உங்களை நம்பி தான் இருக்கேன்..தியேட்டர் ஓனர்களுக்கு ‘சப்தம்’ பட இயக்குனர் வைத்த கோரிக்கை.!

கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…

6 hours ago

This website uses cookies.