இதெல்லா வெளிய சொல்ல முடியாது.. அமைச்சர் வரைக்கும் தொடர்பு இருக்கு : வில்லங்க வீடியோவால் சர்ச்சையில் சிக்கிய காவலர்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 January 2023, 7:41 pm

சேலம் செவ்வாய்பேட்டை காவல் நிலைய தலைமை காவலர் கோவிந்தன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவது குறித்து செவ்வாய்பேட்டை காவல் நிலைய தலைமை காவலர் கோவிந்தன் பேசிய வீடியோ காட்சிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

அதில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனைக்கு அமைச்சர் வரை தொடர்பு இருப்பதாக அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

https://vimeo.com/790433489

இந்த நிலையில் கோவிந்தனை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா உத்தரவிட்டுள்ளார்.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!