‘வெளிய நாங்க தான் சண்டியரு… ஐடி கார்டு கேட்பானா..?’ இந்து அறநிலையத்துறை அதிகாரியை கெட்ட வார்த்தையில் திட்டிய போலீஸ்காரர்..!!

Author: Babu Lakshmanan
24 October 2023, 7:20 pm

பழனியில் இந்து சமய அறநிலைத்துறை இணைஆணையர் மற்றும் கோவில் ஊழியர்களை தகாத வார்த்தையில் காவலர் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் பிரபு. இவர் வழக்கமான ரோந்து பணியை பழனி தாராபுரம் சாலையில் மேற்கொண்டுள்ளார். அப்போது, கோயில் ஊழியர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளார்.

பழனி கோயிலில் பணிபுரிவதாக கூறியதை அடுத்து, காவலர் பிரபு, பழனி கோயிலுக்கு போலீசார் வரும்போது அனுமதிப்பதில்லை, அடையாள அட்டை கேட்டு சோதனை செய்கிறீர்கள் எனவும், கோயில் இணை ஆணையர் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார்.

மேலும், கோயிலில் பணிபுரிபவர்கள் வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கையை போலீசார் எடுப்போம் எனவும் எச்சரித்துள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்தவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ வைரலான நிலையில் காவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…