‘உன் கூட *****.. நான் சொல்ற இடத்துக்கு தனியா வா’ : கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய காவலர்.. தனிமையை தேடியவருக்கு தர்ம அடி!!
Author: Udayachandran RadhaKrishnan21 February 2022, 4:06 pm
திருப்பூர் : செல்போன் மூலம் கல்லூரி மாணவியை தனிமைக்கு அழைத்த காவலரை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து தர்ம அடி கொடுத்த நிலையில் காவலரை பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வெள்ளியம் பாளையம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி தனது காதலருடன் சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சுப்பிரமணி (வயது 38) இருவரிடமும் விசாரணை செய்து அலைபேசி எண்ணை பெற்றுள்ளார். நேற்று பெண்ணின் எண்ணுக்கு அழைத்த காவலர், மாணவியை தனியாக வருமாறு அழைத்துள்ளார்.
இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவலர் கூறிய இடத்திற்கு சென்று அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் காயமடைந்த காவலர் சுப்பிரமணி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் காவலர் சுப்பிரமணியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க வேண்டிய காவலர்களே பெண்ணிடம் அநாகரீகாமாக நடந்து கொண்டு பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.