உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி பெண்ணுக்கு மிரட்டல்.. திருமணம் செய்ய மறுத்ததால் காவலர் வெறிச்செயல்!
Author: Udayachandran RadhaKrishnan26 March 2025, 10:19 am
கோயம்பேடு போக்குவரத்து போலீசில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த் இவர் மாங்காடு அடுத்த மௌலிவாக்கம், ராஜராஜன் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் குழந்தை இல்லாததால் முதல் மனைவி உடன் விவாகரத்து ஆனது இதையடுத்து இரண்டாவதாக ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது
இதையும் படியுங்க: அதிர்ச்சியில் நடிகை மீனா… மனோஜ் மறைவு குறித்து திடீரென போட்ட பதிவு!
இதில் ஆனந்தின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆனந்த் குடித்துவிட்டு குடியிருப்பு வாசிகளிடம் தகராறு செய்வது வீடுகள் மற்றும் வாகனங்களை அடித்து உடைப்பது குடியிருப்பில் உள்ள பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது போன்ற பல்வேறு சம்பவத்தில் ஈடுபட்டதால் மாங்காடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் நிபந்தனை ஜாமினில் வந்த ஆனந்த் மாங்காடு போலீஸ் நிலையத்தில் கையெழுத்து விட்டு வந்த நிலையில் மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அந்த பெண் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆனந்த் திருமணத்திற்கு முன்பு இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை அந்த பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பியதால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் உறவினர்கள் போரூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து போரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் திருமணத்திற்கு முன்பு இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோக்களை அனுப்பியது உறுதியான நிலையில் போலீஸ்காரர் ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணால் குடித்துவிட்டு தகராறு செய்து சிறையில் இருந்து வெளியே வந்தவர் மீண்டும் திருமணம் செய்ய மறுத்ததால் ஒன்றாக இருக்கும் வீடியோக்களை அனுப்பி தற்போது மீண்டும் கைதான சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது