‘வண்டிய நிறுத்தே’… மடக்கி மடக்கி லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் வாங்கும் போலீஸ்காரர்கள்… வைரலாகும் வீடியோ

Author: Babu Lakshmanan
27 May 2024, 10:02 pm

விழுப்புரம் – வானூர் மொராட்டாண்டி சுங்கச்சாவடி அருகே உள்ள மதுவிலக்கு சோதனை சாவடியில் லாரி ஓட்டுனர்களிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆரோவில் அருகே புதுச்சேரி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மொராட்டாண்டி சுங்கச்சாவடி. இந்த சுங்கச்சாவடி அருகே விழுப்புரம் மாவட்டம் காவல் துறையின் மதுவிலக்கு சோதனை சாவடி அமைந்துள்ளது.

மேலும் படிக்க: லேப்டாப் சார்ஜரால் பறிபோன பெண் மருத்துவரின் உயிர்… கோவை பெண்ணுக்கு சென்னையில் நடந்த சோகம்..!!!!

இந்த சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று இரவு அவ்வழியாக செல்லும் கனரக வாகனங்களுக்கு மதுவிலக்கு சோதனைச் சாவடியில் உள்ள போலீசார் கனரக வாகனங்களை வழிமடக்கி லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Case Against MGR எம்ஜிஆர் மீது வழக்கு தொடுத்து ஜெயித்தவர் என் அப்பா… பிரபல நடிகர் ஓபன் டாக்!
  • Views: - 550

    0

    0