கஞ்சா கடத்தியவருக்கு ஊக்கத்தொகை கொடுத்த காவலர் : காவல்துறைக்கே தண்ணி காட்டிய போலீஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2024, 4:18 pm

கஞ்சா கடத்தல்காரர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து கஞ்சா கடத்த சொன்ன காவலரின் சம்பவம் காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஏளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் கடந்த 18ஆம் தேதி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தை நிறுத்தி சோதனை இட்டபோது அதில் வந்த திருச்சியைச் சேர்ந்த முகமது அசாருதீன் (35) கோயம்புத்தூரைச் சேர்ந்த விவேக் (27) கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 32 கிலோ கஞ்சா வை பறிமுதல் செய்த மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் இருவரையும் கைது செய்து நடத்திய விசாரணையில் மதுரையைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு படை காவலர் பிரகாஷ் (27) என்பவர் இருவருக்கும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்ய ஊக்கத்தொகை கொடுத்து அனுப்பியது தெரியவந்தது.

இந்த நிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மேற்கண்ட இருவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது கஞ்சா கடத்தலுக்கு ஊக்கத்தொகை வழங்கிய தமிழ்நாடு சிறப்பு படை காவலர் பிரகாஷை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா கடத்தலுக்கு ஊக்கத்தொகை வழங்கிய வழக்கில் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 252

    0

    0