சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த பிரம்ம மூர்த்தி 33 பிரபல ரவுடி இவர் இந்திய குடியரசு கட்சி அத்வாலே பிரிவு மாநில துணைத்தலைவராக இருந்து வருகிறார்.
பிரபல ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி நகை பறிப்பு அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
பிரபல ரவுடி பிரம்மமூர்த்தி மீது 54 வழக்குகள் உள்ளது. சென்னை சேலம் நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளது.
இவரை போலீசார் தேடி வந்த நிலையில்
செவ்வாய்பேட்டை போலீசார் சேலம் அரசு மருத்துவமனை அருகே வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர்
அப்போது அவ்வழியாக வந்த பிரம்ம மூர்த்தியை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்
இதனிடையே கைது செய்யப்பட்டதை அறிந்த பிரம்ம மூர்த்தியின் ஆதரவாளர்கள் ஏராளமான செவ்வாய்பேட்டை காவல் இணையத்தில் திரண்டு முற்றுகையிட்டனர்.
அங்கு கோஷங்களை எழுப்பினர் இதனால் பரபரப்பு நிலவியது. கைது செய்யப்பட்ட பிரம்ம மூர்த்தியை உடனே விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
ஆனால் போலீசார் பிரம்ம மூர்த்தியை விட மறுத்து முற்றுகை ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பல்வேறு வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளது என்றும் தெரிவித்தனர்.
இதனை அடுத்து முற்றுகை ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இவர் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி செவ்வாய்பேட்டை பகுதியில் இருதரப்பின் இடையே ஏற்பட்ட போது ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பிரம்மமூர்த்தி தலைமறைவாக இருந்ததும் இவர் மீது சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தது கொலை முயற்சிக்கு உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.