தம்பி பொறுத்தது போதும்… விஜய்யை அழைக்கும் அரசியல் பிரமுகர்கள் : சர்ச்சைக்குள்ளான போஸ்டர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2023, 3:57 pm

தம்பி பொறுத்தது போதும்… விஜய்யை அழைக்கும் அரசியல் பிரமுகர்கள் : சர்ச்சைக்குள்ளான போஸ்டர்!!!

நடிகர் விஜயின் அரசியல் பயணம் வேகமெடுத்து வருகிறது என்றே கூறலாம். அண்மையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற முதல் இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை தொகுதி வாரியாக சென்னைக்கு நேரில் அழைத்து பாராட்டி ஊக்கத்தொகையை வழங்கினார்.

இதை வைத்து பார்க்கும்பொழுது, வரும் காலங்களில் அவர் தேர்தலிலேயே களமிறங்க அதிக வாய்ப்பு இருப்பதாக சில இணையதள நெட்டிசன்கள், சினிமா விமர்சகர்களும் கருத்து தெரிவித்து உள்ளனர். ஏனெனில், அந்த அளவுக்கு விஜய்யின் மக்கள் இயக்கம் செயல்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது.

அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கிய கூட்டத்தில், காமராஜர், பெரியார், அம்பத்கர் உள்ளிட்ட தலைவர்களை பற்றி படிக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என பெற்றோர்களிடம் கூறுங்கள் என பேசி அரசியல் களத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அந்த வகையில், அடிக்கடி விஜய்யின் ரசிகர்கள் பரபரப்பான போஸ்டர்களை தெருவோரமாக ஓட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விடுவார்கள்.

வழக்கம் போல் தற்பொழுதும் மதுரை மாவட்ட தளபதியின் ரசிகர்கள் ஒரு போஸ்டரை அடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர்கள் ஒட்டியுள்ள அந்த போஸ்டரில், எம்.ஜி.ஆர் மற்றும் காமராஜர் நடுவே விஜய் நிற்கிறார்.

மேலும் தம்பி பொறுத்தது போதும், வா தமிழ்நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்க நாங்கள் அமர்ந்திருந்த அரியாசனம் உனக்காக காத்திருக்கிறது நாளைய முதல்வர் நீயே என் இருவரும் விஜய்யை அழைப்பது போல போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

சமீப நாட்களாக, பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தொடர்ந்து பல்வேறு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம் (ஆகஸ்ட் 26 ம் தேதி) மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது

இதனையடுத்து, (செப்டம்பர் 9-ம் தேதி) மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுது. இதற்கு முன்னதாக, (செப்டம்பர் 5-ம் தேதி)விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 463

    0

    0