கோவையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் : வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2022, 8:32 pm

கோவை : கோவையில் 38வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஷர்மிளா சந்திரசேகர் இன்று தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று காலை முதல் வேட்பு மனு மீதான பரிசீலன நடைபெற்று வருகிறது. தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.

இதில் கோவை மாநகராட்சி 38வது வார்டில் அதிமுக சார்பில் டாக்டர்.ஷர்மிளா சந்திரசேகர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த சூழலில், அவர் நேற்று தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து இன்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சந்தித்த அதிமுக வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர் அவரிடம் ஆசி பெற்று பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

38வது வார்டுக்கு உட்பட்ட பொம்மனாம்பாளையம் பகுதியில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் கொடுத்து தனக்கு ஆதரவு திரட்டினார். மேலும் , பொம்மனாம்பாளையம் பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் வீடுகளுக்கு சென்ற அவர் தனக்கு ஆதரவு கோரினார்.

அவருக்கு வழிநெடுக பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சந்திரசேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

dr sharmila chandra sekar

https://www.facebook.com/Drsharmilachandrasekar

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…