ஒரே நாளில் அடுத்தடுத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கொலை.. பாஜகவினர் மறியல் : பீதியில் தமிழகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 July 2024, 12:57 pm

சிவகங்கை மாவட்டம் வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்தார்.

இவர் நேற்றிரவு தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியது. அவ்வழியாக வந்தவர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்வக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை அறிந்த கிராம மக்கள் மற்றம் பாஜகவினர் கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட எஸ்.பி. குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மூன்று நாட்களில் அடுத்தடுத்து 3 கொலைகள் நடைபெற்ற சம்பவம் சிவகங்கை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் கன்னியாகுமரியில் கொலை செய்யப்பட்டுள்ளார். அதே போல கடலூரில் அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் கட்சிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 256

    0

    0