பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திப்பு: கோவை நீதிமன்றம் உத்தரவு..!!
Author: Rajesh26 February 2022, 12:50 pm
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை வரும் ஏப்ரம் மாதம் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவி மற்றும் சில பெண்களை பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து துன்புறுத்தியது தொடர்பாக, ஒன்பது பேர் மீது, கோவை மகளிர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார்,மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் சிறையிலிருந்தபடி, காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர்.
மகளிர் கோர்ட் நீதிபதி விடுமுறை என்பதால், டான்பிட்கோர்ட் நீதிபதி ரவி(பொறுப்பு), வழக்கை விசாரித்தார். தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் மாதம் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.