மாமனாருக்கு மருமகன் வைத்த குறி… விஷம் கலந்த மதுவை நண்பருடன் குடித்த மாமனாரும் பரிதாப பலி

Author: Babu Lakshmanan
7 September 2022, 12:41 pm

பொள்ளாச்சி அருகே நெகமத்தில் மது அருந்தி இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து நெகமம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

நெகமம் அடுத்த பொன்னாக்காணி பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (56), விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (58) கூலித்தொழிலாளி. இருவரும் நேற்று முன்தினம் நெகமம் அடுத்துள்ள பனப்பட்டியில் இருந்து பொன்னாக்காணி செல்லும் பகுதியில் அமர்ந்து மது அருந்தினர்.

அப்போது, இருவரும் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில், இருவரும் குடித்தது போலி மதுவா? அல்லது கள்ளச்சாரயமா? என்ற கோணத்தில் நெகமம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

தொடர்ந்து விசாரணையில், பலியான மனோகரன் அவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்றை விற்று நிறைய பணம் வைத்துள்ளார். தோட்டம் விற்ற பணத்தை கொண்டு நண்பர்களுடன் மது குடித்து ஜாலியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் மனோகரன் உறவினரான அதே பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் (30), இவர் பாப்பம்பட்டியில் உள்ள தனியார் கோழித்தீவன கம்பனியில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவரும் இறந்து போன மனோகரன் மகள் மாசிலாமணி (25) ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகள் உள்ளனர். மனோகரன் அவ்வப்போது மருமகன் சத்தியராஜ் இடம் மது இருந்தால் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி குடித்து வந்து உள்ளார். இதைப்பயன்படுத்திய சத்தியராஜ் மாமனாரிடம் பணம் நிறைய இருப்பதை அறிந்து நேற்று முன்தினம் மதுவில் விஷம் கலந்து வைத்துள்ளார்.

மாமனார் மனோகரன் மருமகன் சத்தியராஜிடம் வழக்கம் போல மது கேட்டு உள்ளார். அப்போது, விஷம் கலந்த மதுவை மனோகரனிடம் வாங்கிக்கொண்டு, தனது உறவினரான வேலுச்சாமி தோட்டத்தில் அவரது நண்பர் மனேகரன், மது அருந்தியது தெரிய வந்தது.

இதை அடுத்து, நெகமம் காவல் நிலைய போலீசார் சத்யராஜ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.பணத்திற்காக மாமனாரை மருமகன் மதுவில் விஷம் வைத்து கொன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 607

    0

    0