அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்திய போது இனித்தது… இப்போது கசக்கிறதா? பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கு!
Author: Udayachandran RadhaKrishnan4 November 2023, 10:26 am
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்திய போது இனித்தது… இப்போது கசக்கிறதா? பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கு!
கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அடித்த முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில் கடந்த ஆறு மாதங்களாக பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார் கிராமங்களுக்கு போதுமான தண்ணீர் வருவது இல்லை எனவும் இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் பலமுறை கடிதம் அளித்தும் நடவடிக்கை இல்லை, அதன் காரணமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டிருப்பதாகவும், விரைவில் தீர்வு காண வேண்டும்,நடவடிக்கை இல்லை என்றால் அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
மேலும் குடிநீர் திட்டத்திற்காக எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது 71 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தார், புதுப்பித்த திட்டத்தின் தண்ணீர் வரவில்லை எனவும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்பதால் ஆளுங்கட்சி பழிவாங்குகிறதா என தெரியவில்லை எனவும் ஆளுங்கட்சியின் கைக்கூலியாக போலீஸ் செயல்படுகிறது எனவும் தெரிவித்தார்.
நெகமம் அடுத்த குள்ளக்கா பாளையம் கிராமத்தில் உண்மையான நெசவாளர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டு காலம் வேலை கிடைக்காத போதும், நெசவாளர்களாக இல்லாதவர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டுமென போட்டிபோட்டுக் கொண்டு திமுகவினர் வந்து மிரட்டுகிறார்கள் என குற்றம் சாட்டியவர எதிர்க்கட்சியின் தொகுதி என்பதால் பழிவாங்க கூடாது எனவும் தெரிவித்தார்.
பொதுப்பணித்துறை அமைசசர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும. சோதனை தொடர்பான கேள்விக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்திய போது அவர்களுக்கு இனித்தது. இப்போது கசப்பாக இருக்கிறதா? எனவும் உப்பைத்தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும் என விமர்சித்தார்.
மேலும் திமுக ஆட்சி லஞ்ச உழலில் திழைத்துக் கொண்டிருக்கிறது எனவும் எங்க எடுத்தாலும் எதற்கெடுத்தாலும் லஞ்சம், இதுதான் திமுகவின் ஆட்சியின் நிலைமை, விரைவில் இது மாற வேண்டும் என தெரிவித்தார்