கோபித்துக் கொண்டு சென்ற தந்தை… அண்ணன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தம்பி ; பட்டப்பகலில் பயங்கரம்!!

Author: Babu Lakshmanan
31 October 2023, 9:37 pm

கோவை ; பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் அண்ணன் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவான தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மூட்டாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மனைவி அம்சவேணி, இவர்களுக்கு ராமகிருஷ்ணன் (29), மோகன்ராஜ் (25) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில், ராமகிருஷ்ணன் அடிக்கடி தந்தையுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அய்யாசாமி பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இதனையடுத்து, தந்தையை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக இரண்டு மகன்களும் இன்று திப்பம்பட்டி உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தந்தையை சமாதானப்படுத்தி வந்துள்ளனர்.

அப்போது, ராமகிருஷண்ணன், மோகன்ராஜ் இருவரும் திப்பம்பட்டி பகுதியில் சாலையோரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயம் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு அண்ணன் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு, தம்பி மோகன்ராஜ் தப்பியோடியதாக கூறப்படுகிறது

பின்னர் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கோமங்கலம் காவல் நிலையம் போலீசார் ராமகிருஷ்ணன் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான தம்பி மோகன்ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

பட்டப் பகலில் சாலை ஓரத்தில் அண்ணன் தலையில் கல்லை போட்டு தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 369

    0

    0