மழை நீர்வடிகாலுக்காக குழி தோண்டும் போது விபரீதம்… சரிந்து விழுந்த கடை ; பொக்லின் இயந்திரத்தில் முட்டுக் கொடுத்த அதிகாரிகள்!!

Author: Babu Lakshmanan
22 May 2024, 12:30 pm

பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் மழை நீர் வடிகால் பணிக்காக குழி தோண்டும்போது கடையின் முன் பகுதி இடிந்து விழுந்த நிலையில், மேற்கொண்டு விபரீதம் நடக்காமல் இருக்க பொக்லின் இயந்திரத்தின் மூலம் அதிகாரிகள் முட்டுக்கொடுத்த சம்பவம் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி மீன்கரை சாலை, மார்க்கெட் ரோடு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு மளிகை கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளது. நேற்று மாலை மழை நீர் வடிகால் கட்டும் பணிக்காக நெடுஞ்சாலை துறையினர் பொக்லின் இயந்திரம் மூலம் குழிதோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் படிக்க: நில அளவையாளர் வீட்டில் திடீர் ரெய்டு… அடுக்கடுக்காக வந்த புகார்.. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி!!

அப்போது குரு ராஜன் என்பவருக்கு சொந்தமான முகப்பு பகுதியில் அஸ்திவாரம் பெயர்ந்து கீழே இறங்கியது. முன் பகுதியில் இருந்த கதவுகள் மேற்கூரைகள் சேதமடைந்தது. மேலும், கடை அஸ்திவாரத்தின் கீழ் பகுதியில் இறங்குவதைக் கண்ட நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் மேலும் சரியாமல் இருக்க பொக்லின் இயந்திரத்தின் மூலம் முட்டுக்கொடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து, அங்கு திரண்ட வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளர்கள், தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

“அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதால் இது போன்ற சம்பவங்கள் ஏற்படுகிறது. ஒரு கடை இடிந்து விழுந்தால் மற்ற கடைகள் அனைத்தும் இடிந்து விழ வாய்ப்பு உள்ளது. இதற்கு யார் பொறுப்பேற்பது. இது போன்ற பணிகளை மேற்கொள்ளும் போது முறையாக வியாபாரிகளுக்கு தகவல் கொடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!