பொள்ளாச்சி அருகே புலி நடமாட்டம்… சாலை ஓரத்தில் கம்பீர நடைபோடும் வீடியோ ; வாகன ஓட்டிகள் பீதி..!

Author: Babu Lakshmanan
22 August 2023, 10:50 am

பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் சாலை ஓரத்தில் புலி நடமாட்டம் சமூக வலைதளங்களில் பரவும் வைரல் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் பெரியார் புலிகள் காப்பகம் கேரளா மாநில வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு காட்டுயானை, புலி, சிறுத்தை புலி, புள்ளிமான் போன்ற பாதுகாக்கப்பட வன உயிரினங்கள் உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த பகுதி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு இடம் ஆகும்.

பெரும்பாலும் யானை, புள்ளி மான் கூட்டம், காட்டு மாடுகள், வனப்பகுதியில் உள்ள சாலை ஓரங்களில் உலா வருவது வழக்கம். சிறுத்தை புலி மற்றும் புலிகள் இங்கு காண கிடைப்பது அரிது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பரம்பிக்குளம் வனப்பகுதியில், சாலை ஓரம் புலி சுற்றி வந்ததை கண்ட வாகன ஓட்டி ஒருவர் எடுத்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

https://player.vimeo.com/video/856641779?badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…