அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விட்டு நேருக்கு நேர் மோதிய அரசுப் பேருந்துகள் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

Author: Babu Lakshmanan
18 January 2024, 1:56 pm

பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வால்பாறை வெள்ளிமலை பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வால்பாறை பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விடுவதற்காக அரசு பேருந்து வந்துள்ளது. வரும் வழியில் அரசு பேருந்தில் பிரேக் செயல் இழந்ததால் சாலையில் நின்றிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதி சென்றது.

அப்போது பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை வந்த அரசு பேருந்து எதிரே வரும்போது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பேருந்திலும் பயணம் செய்த பயணிகளுக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கும் என 20க்கும் மேற்பட்டவர்கள் காயங்கள் ஏற்பட்டது.

பின்பு அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதில் ஆறு பயணிகளுக்கு காயங்கள் அதிகமாக ஏற்பட்டுள்ளதால் வால்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 511

    0

    0