தமிழக மக்களுக்கு துரோகம் செய்த திமுக.. பொன்.ரா விளாசல்!

Author: Hariharasudhan
24 February 2025, 11:19 am

தமிழக மக்களுக்கு இதுமாதிரியான துரோகங்களை செய்துவிட்டு மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வர் பேசுவதாக பொ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தின் கோப்ரட்டீவ் காலனி பகுதியில், பாஜக சார்பில் 2025 மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கோவை வடக்கு மாவட்டத் தலைவர் கரு.மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில், மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் முதன் முதலாக 6,000 பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன் பின்னர் அவரது ஆட்சி முடியும்போது, அது 30 ஆயிரம் பள்ளிகளாக உயர்ந்தது. தடுக்கிவிட்டால் அரசுப் பள்ளி என இருந்தது. அதற்குப் பின்னர், 1967இல் திமுக ஆட்சியில் எத்தனை அரசுப் பள்ளிகள் செயல்பட்டன, எவ்வளவு மாணவர்கள் பயின்றார்கள், எத்தனை ஆசிரியர்கள், பணியாற்றினார்கள் தற்போது அது எந்த அளவுக்கு குறைந்துள்ளது ஏன்?

மாணவர்கள் தனியார் பள்ளியை நோக்கிச் சென்றார்கள் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? மேலும், தற்போதையச் சூழலில் அரசுப் பள்ளிகளில் நான்கு மாணவர்கள் படிக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

Pon Radhakrishnan about MK Stalin

இது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூட இல்லை. தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஏன் அரசுப் பள்ளிகள் மேம்படுத்தப்படவில்லை? இதனால் எத்தனை அரசுப் பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளது? இதற்கு தமிழக முதல்வர் என்ன சொல்லப் போகிறார்? தமிழக மக்களுக்கு இதுமாதிரியான துரோகங்களை செய்துவிட்டு மும்மொழிக் கொள்கை பற்றி பேசுகிறார்.

இதையும் படிங்க: மீண்டும் தலைதூக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் மவுண்ட் ரோடு பக்கம் வந்தால் திரும்ப மாட்டீர்கள் என ஒரு முதல்வர் சொல்வது, முதல்வர் பதவிக்கே அவர் அருகதையில்லை. முதல்வர் ஸ்டாலின் கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளி. தமிழகத்தில் திமுகவுக்கு எதிராகப் பேசினால் கொலை செய்யவும் தயாராகிவிட்டது. 2026-இல் தமிழகத்தில் பாஜக தலைமையில் ஆட்சியைப் பிடிப்போம், திமுகவைத் தோற்கடிப்போம்” என்றார்.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?