ஓட்டல் ஊழியரின் பைக்கை திருடிய டிப் – டாப் நபர்… சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வலைவீச்சு..!!
Author: Babu Lakshmanan5 May 2022, 9:17 pm
புதுச்சேரியில் ஹோட்டல் ஊழியரின் இருசக்கர வாகனம் திருடி சென்ற டிப்-டாப் நபரை போலிசார் சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மரைன் விதியில் உள்ள வட இந்தியர் உணவகம் ஒன்றில் பணிபுரிபவர் மோகன் ராஜ். இவர் கடந்த 29 ஆம் தேதி மதியம் தனது இருசக்கர வாகனத்தை உணவகத்தின் வெளியே நிறுத்தி விட்டு, பின்னர் இரவு வந்து பார்த்த போது, அவரது இருசக்கர வாகனம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், அவர் இது குறித்து பெரியகடை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்.
அதில் டிப்-டாப் உடை அணிந்த நபர் ஒருவர் மோகன்ராஜின் இருசக்கர வாகனத்தை தள்ளி கொண்டு செல்வது பதிவாகி இருந்தது. இதனை அடுத்து, அந்த நபர் யார் என்பது குறித்து சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.