பைக்கோடு சேர்ந்து எரிந்து சாம்பலான நெல் வியாபாரி… அதிர்ச்சி சம்பவம்.. திட்டமிட்ட கொலையா..? என போலீசார் விசாரணை

Author: Babu Lakshmanan
1 August 2022, 7:12 pm

புதுச்சேரி : புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருவர், இருசக்கர வாகனத்துடன் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி அருகே கரிக்கலாம்பக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபல்(65). நெல் வியாபாரியான இவர், தவளகுப்பம் பகுதியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, அபிஷேகபாக்கம் பகுதியில் அவரது இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது,

மேலும், அவர் மீதும் தீப்பற்றியதால் வேணுகோபால் உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாலையில் ஒருவர் உயிரோடு எரிந்துகொண்டிருந்த சம்பவம் அந்த வழியாக சென்றவர்களை மிகுந்த அதிர்ச்சிகுள்ளாக்கியது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தவளகுப்பம் காவல்நிலைய போலீசார், வேணுகோபால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நடைபெற்ற சம்பவம் கொலையா…?? அல்லது விபத்தா..? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 2612

    0

    0