புதுச்சேரியின் கடல் அழகை ரசிக்கும் விதமாக படகுசேவை அறிமுகம் : சொகுசு படகில் பயணித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்!!

Author: Babu Lakshmanan
16 March 2022, 11:53 am

புதுச்சேரியில் முதல்முறையாக சுற்றுலாவினர்கள் கடல் அழகை ரசிக்கும் வகையில் பயணிகள் படகு சேவை இன்று தொடங்கியது.

சர்வதேச சுற்றுலா நகரமான புதுச்சேரியில் வெளிநாட்டினர் மற்றும் வெளிமாநிலத்தவர்கள் அதிகம் விரும்பும் புதுச்சேரியின் பல்வேறு கடற்கரைகளை கடலில் இருந்து பார்க்கும் வகையில் படகு சேவை திட்டம் தொடங்கியது. அதன்படி, முதல்முறையாக சொகுசு படகு மூலம் பயணிகளை அழைத்துக்கொண்டு கடலில் இருந்து புதுச்சேரி நகரின் அழகை காணும் வகையில், முதல் சொகுசு படகு பயணம் எக்ஸ்போ கிரவுண்ட்டில் இருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.

படகில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளார்கள். புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறையுடன் இணைந்து தனியார் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த படகில் பயணிக்க ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

இந்த படகு புதுச்சேரியின் பாரம்பரிய கடற்கரை, பாண்டி மெரினா, பாரடைஸ், நீளம், ரூபி உள்ளிட்ட பல்வேறு கடற்கரைகள் வழியாக பயணித்து நல்லவாடு வரை 3 மணி நேரம் பயணித்து சுற்றுலாவினர்கள் அதன் அழகை காணும் வசதி செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை மாலை என இரண்டு தடவை இயக்கப்படும் இந்த படகில் பயணிக்க முன் பதிவு அவசியமாகின்றது. வார இறுதி நாட்களில் பல்வேறு மாநிலத்திலிருந்து புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாவினர்களுக்கு இந்த படகு பயணம் வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1735

    0

    0