ஆளுநர் ஆர்என் ரவி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா..? சரித்திரத்தை மாற்றி அமைக்க முயற்சி ; நாராயணசாமி குற்றச்சாட்டு

Author: Babu Lakshmanan
27 January 2024, 4:39 pm

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உண்மையில் சுயநினைவோடு இருக்கிறாரா? மன நலம் பாதித்துள்ளாரா என்பது தெரியவில்லை என்றும், பொய்யான தகவலை கூறி சரித்திரத்தை மாற்றி அமைக்க முயல்கிறார் என முன்னாள் முதலமைச்சர் நாரயாணசாமி டுமையாக சாடினார்.

புதுச்சேரியில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது :- ராகுல் காந்தியின் பாதயாத்திரையை தடுத்து நிறுத்தவும், பொதுகூட்டங்களுக்கு தடை விதிப்பது, அவரை கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவதை பாஜக தடுத்து வருவதாகவும், ராகுல் காந்தியின் அமைதியான முறையிலான பாதயாத்திரையை தடுக்கும் பாஜகவை வன்மையாக கண்டிக்கிறேன், என கூறினார்.

மேலும், தமிழக ஆளுநர் ரவி காந்தியடிகளால் சுதந்திரம் பெறவில்லை. நேதாஜியின் போராட்டம் ராணுவ கிளர்ச்சியால் தான் சுதந்திரம் கிடைத்தது என திரித்து தவறான தகவலை பேசியிருக்கிறார் என்றும், ஆர்.என்.ரவி உண்மையில் சுயநினைவோடு இருக்கிறாரா? அல்லது விடுதலை சரித்திரத்தை படிக்கவில்லையா என்பது விந்தையாக உள்ளது என்றும், அவர் மன நலம் பாதித்துள்ளாரா என்பது தெரியவில்லை. பொய்யான தகவலை கூறி சரித்திரத்தை மாற்றி அமைக்க முயல்கிறார் என கடுமையாக சாடினார்.

தொடர்ந்து பேசிய நாராயணசாமி, புதுச்சேரியில் தொடர்ந்து 2 மாதங்களாக மத்திய அரசின் திட்டங்களை கொண்டு செல்கிறோம் என புதுச்சேரி அரசு அதிகாரிகளை பயன்படுத்தி பாஜகவுக்கு விளம்பரங்களை துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்து வருகிறார். ஆளுநருக்கு சவால் விடுகிறேன். புதுச்சேரியில் பிரதமரின் ஆயுஷ்மான் காப்பீட்டு திட்டத்தில் கொடுக்கப்பட்ட அடையாள அட்டையை கொண்டு அப்போலோ, மியாட், ஜிப்மர் மருத்துவமனையில் ஏற்றுகொள்ளவில்லை.

எதையும் செய்யாமல் பாராளுமன்ற தேர்தலுக்காக அரசு பணத்தை வீணாக்கி ஆளுநர் தமிழிசை பாஜகவுக்கு வாக்கு சேகரிக்கிறார். புதுச்சேரியை முதலமைச்சர் ரங்கசாமி சிறந்த மாநிலமாக மாற்றவில்லை, குட்டிசுவராக மாற்றியுள்ளார். கஞ்சா, போதை பொருள் விற்பனை, கொலை அதிகரித்து வருகிறது. இதுதான் அவரின் பெஸ்ட் மாநிலமா? மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கியதில் இமாலய ஊழல் நடந்துள்ளது. எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என குடியரசு தலைவரை வலியுறுத்துகிறேன்.

மேலும், முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை ஆட்சியாளர்கள் கிடைப்பதை சுருட்டிகொண்டு செல்கின்றனர். மக்களை பற்றியும், மாநில வளர்ச்சி பற்றி அவர்களுக்கு கவலையில்லை. முதலமைச்சருடன் மேடை அமைத்து பேச தயாராக உள்ளேன். அவரை வர சொல்லுங்கள். ஆதாரத்தோடு பேசுவேன், அவரால் பதில் கூற முடியாது. மேலும், காங்கிரஸ் கட்சி புதுச்சேரி மாநிலத்தில் நம்பர் 1 கட்சி. காங்கிரஸ், திமுக கூட்டணியில் எந்தவித விரிசலும் இல்லை, என கூறினார்.

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!