தமிழ்நாடு பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
மதுரையில் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்துள்ள தமிழிசை சவுந்திரராஜன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்களிடம் பேசும் போது:- G ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெற்று வரும் வருமான வரித் துறை சோதனை குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. நான் பாஜக தலைவராக இருந்தபோது அனைத்து கூட்டணிக் கட்சி தலைவர்களிடமும் மரியாதையுடன் நடந்திருக்கிறேன்.
அனைவருக்கும் கருத்துக் கூற உரிமையுண்டு. அதனடிப்படையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவரது கருத்தை தெரிவித்து இருக்கிறார். எதிர்கட்சித் தலைவர் கூறிய கருத்திற்கு கண் காது, மூக்கு, தொப்பி எல்லாம் வைத்து கேள்வி எழுப்புகிறீர்கள் என்றார்.
பாஜக கட்சி குறித்து தற்போதைய தலைவர்களிடம் கேளுங்கள். நான் ஆளுநராக இருக்கிறேன். என்னை இதில் இழுத்துவிடாதீர்கள். 12 மணி நேர தொழிலாளர் திருத்தச் சட்டத்தை தொழிலாளர்களிடம் விட்டுவிடுங்கள். அதனை அரசியலாக்க வேண்டாம்.
நான் மருத்துவராக ஓர் கருத்து இதில் கூறுகிறேன். 4 நாட்கள் பணி 3 நாட்கள் விடுமுறை இருந்தால் தொழில் உற்பத்தி அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் வந்துள்ளன. கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. கோடை வெயில் அதிகரித்து இருப்பதால் நீர் சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள், எனக் கூறினார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.