பாஜக பிரமுகர் மனைவியிடம் 85 சவரன் நகை மோசடி : பெண் உள்பட இருவருக்கு வலைவீச்சு..!!

Author: Babu Lakshmanan
4 May 2022, 11:35 am

புதுச்சேரி பா.ஜ.க தலைவர் மனைவியிடம் 85 சவரன் தங்க நகைகளை வாங்கி கொண்டு மோசடியில் ஈடுப்பட்ட பெண் உட்பட இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன், இவரது மனைவி விஜயலட்சுமி, இவர் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே இவருடைய நெருங்கிய தோழியாக இருந்து வருபவர் வாணரப்பேட்டையை சேர்ந்த விஜயகுமாரி (50).

இந்நிலையில் விஜயகுமாரி குழந்தைகளின் படிப்பு செலவு திருமண செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி, விஜயலட்சுமியிடம் கடந்த 2018ம் ஆண்டு பணம் கேட்டுள்ளார். விஜயலட்சுமியிடம் பணம் இல்லாத காரணத்தினால் தனது தோழிக்கு உதவிடும் எண்ணத்தில் தன்னிடம் இருந்த நகைகளை அவப்போது கொடுத்து உதவியுள்ளார்.

அதை விஜயகுமாரி தனியார் நிதி நிறுவனத்தில் அடகுவைத்து பணம் வாங்கி கொண்டுள்ளார். இது போல் அடகு வைப்பதும் மீட்டு கொடுப்பதுமாக இருந்த இவர்களது பரிவர்த்தனை, ஒரு கட்டத்தில் விஜயலட்சுமி தனது தோழியிடம் கடைசியாக கொடுத்த 85 சவரன் நகைகளை தனது பெண்ணுக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற திருமணத்திற்காக கேட்டுள்ளார்.

அதற்கு விஜயகுமாரி முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அவரை தொடர்பு கொள்ளவும் முடியாமல் இருந்ததை அடுத்து, இதுதொடர்பாக விஜயலட்சுமி லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலிசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள விஜயகுமாரி மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது உறவினர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 1299

    0

    0