அமைச்சர் to அம்மன்…. வளைகாப்பில் நடனமாடி பிரபலமான அமைச்சர் சந்திரபிரியங்காவின் அடுத்த டிரெண்டிங்…!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
8 March 2022, 4:58 pm

மகளிர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சரை பெண் தெய்வங்களாக வடிவமைத்து வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இன்று சர்சதேச மகளிர் தினவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் என். ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் பெண் அமைச்சராக காரைக்கால் நெடுங்காடு தொகுதியை சேர்ந்த சந்திரபிரியங்கா இருந்து வருகிறார். இவர், அண்மையில் வளைகாப்பு நிகழ்ச்சியில் நடனமாடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. இதன்மூலம் அவர் மிகவும் பிரபலமானார்.

Puducherry Minister's dance during Baby shower goes viral on social media;  netizens react | DH Latest News, DH NEWS, Tamil Nadu, Latest News, India,  NEWS , social media, Viral Video, Puducherry, Dance,

இந்நிலையில் மகளின் தின விழாவை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள காணொளி வாழ்த்து செய்தியில் தாயாக, தாரமாக, சகோதரியாக, தோழியாக உலகை இயக்கும் சக்தியாக நடமாடும் பெண் தெய்வங்களுக்கு சமர்ப்பணம் எனக்கூறி தன்னை அனைத்து பெண் தெய்வங்களாக வடிவமைத்து அந்த படங்களுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்வது போன்று காட்சி படுத்து தனக்கு பக்தர்கள் ஆர்த்தி எடுப்பது போல வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1994

    0

    0