வானரப்பேட்டையில் வானரகங்களின் அட்டகாசம்… சமையல் அறைக்குள் புகுந்து உணவை ருசி பார்க்கும் குரங்குகள்.. பீதியில் மக்கள்!!

Author: Babu Lakshmanan
30 November 2023, 5:53 pm

புதுச்சேரியில் குடியிருப்புகளுக்கு புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள், சமையலறைக்குள் புகுந்து உணவுகளை ருசி பார்த்து வருகின்றன.

புதுச்சேரி வாணரப்பேட்டை அருகே தாவரவியல் பூங்கா உள்ளது. இங்க பல ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான மரங்கள் மிகப்பெரிய அளவில் உள்ளது.
இந்த மரங்களில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. இவற்றுக்கு உணவு கிடைக்காத சூழ்நிலையில், தற்போது அவை குடியிருப்புகளை நோக்கி வர துவங்கி உள்ளன.

கடந்த சில நாட்களாக வானரப்பேட்டை பகுதியில் உள்ள ஆலய வீதி ராஜராஜன் வீதி, கல்லறை வீதி, தமிழ் தாய் நகர், போன்ற பகுதிகளில் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. வீட்டில் உள்ள சமையல் அறையில் புகுந்து பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை சூறையாடி உடன் தேவையான உணவுகளும் எடுத்துச் சென்று ருசி பார்த்து வருகிறது.

மேலும், இரவு பகல் பார்க்காமல் எந்த நேரமும் குரங்குகள் குடியிருப்புகளில் புகுந்து வீட்டில் வைத்திருக்கும் அனைத்து பொருட்களையும் எடுத்து செல்வதால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். அருகில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் மதிய உணவை பையோடு எடுத்துச் செல்வதால் மாணவர்களும் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகளை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!
  • Views: - 1245

    0

    0