புதுச்சேரியில் தீவிரமடையும் ‘ஆபரேசன் விடியல்’… ரவுடிகளில் வீடுகளில் போலீசார் தீவிர சோதனை..!!

Author: Babu Lakshmanan
11 June 2022, 2:46 pm

புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பிரபல ரவுடிகளின் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

புதுச்சேரியில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஆப்ரேஷன் விடியல் என்ற பெயரில் போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள முக்கிய ரவுடிகளின் வீடுகளில் இன்று காலை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது ரவுடுகளின் வீடுகளில் வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் ஏதாவது பதுக்க வைக்கப்பட்டுள்ளதா என சோதனை செய்தனர். மேலும், தற்போது அவர்கள் குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனரா..? அல்லது குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்களா..? என விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் சோதனையின் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ரவுடிகளால் ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால் காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டுமெனவும் போலீசார் அறிவுறுத்தினர்.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்