‘அப்பா என்னா வெயிலுடா’… போதையில் ATM ரூமின் ஏசியில் படுத்து தூங்கிய போதை ஆசாமி ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
2 May 2024, 9:00 am

குடிபோதையில் வெயில் தாங்க முடியாமல் ஏ.டி.எம்-மின் ஏசி அறையில் படுத்து தூங்கியவரின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

புதுச்சேரிக்கு வேலை தேடி பல்வேறு மாநிலங்களில் இருந்து ரயில்கள்,மூலம் தினந்தோறும் பலர் வருகின்றனர். அதேபோன்று பல்வேறு வெளிமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் புதுச்சேரியில் பல்வேறு பணிகளையும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கேரளாவில் இருந்து ரயில் மூலம் புதுச்சேரிக்கு வேலை தேடி வந்த ஒருவர் வில்லியனூர் ரயில்வே நிலையத்தில் இறங்கி உள்ளார். அப்போது புதுச்சேரியில் கடுமையான வெயில் மற்றும் அனல் காற்று வீசவே கையில் இருந்த காசுக்கு மது குடித்து விட்டு வந்த முதியவர், மது போதையில் வில்லியனூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள ஏடிஎம் அறைக்குள் சென்று ஏ.சி அறையில் படுத்து அயர்ந்து தூங்கிவிட்டார்.

அப்போது, ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்தவர்களில் ஒருவர், ஏடிஎம் அறைக்குள் முதியவர் படுத்து தூங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அருகில் உள்ள வில்லியனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஏடிஎமின் ஏ.சி அறையில், ஊரிலிருந்து எடுத்து வந்த பையை தலைக்கு சொகுசாக வைத்து கொண்டு முதியவர் படுத்து ஆசுவாசமாக தூங்கிக் கொண்டிருந்தார்.

மேலும் படிக்க: 120 அடி ஆழ கிணற்றில் கேட்ட சிறுவனின் அலறல் சத்தம்… ஒரு மணி நேரப் போராட்டம்… இறுதியில் நடந்த திக் திக்…!!

அப்போது அவரை தட்டி எழுப்பிய போலீசார், இது ஏடிஎம் அறை, இங்கே எல்லாம் படுத்த தூங்க கூடாது உடனடியாக கிளம்புங்கள் என்று கூறியதுடன் அவரிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது, அவர் கேரளாவில் இருந்து வேலை தேடி புதுச்சேரிக்கு வந்ததாகவும், வெயில் தாங்க முடியவில்லை, அதனால் ஏடிஎமின் ஏ.சி அறையில் படுத்து தூங்கிவிட்டதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவரை அங்கிருந்து போலீசார் அனுப்பிவிட்டனர்.

இதன் பிறகே பொதுமக்கள் ஏடிஎம்முக்குள் சென்று பணம் எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!