நடைபயிற்சியின் போது உயிரிழந்த யானை லட்சுமி… பதற வைக்கும் கடைசி நிமிட சிசிடிவி காட்சி ; கண்ணீர் விட்டு கதறி அழும் பாகன்..!!

Author: Babu Lakshmanan
30 November 2022, 12:56 pm

புதுச்சேரியில் நடைபயிற்சியின் போது உயிரிழந்த மணக்குள விநாயகர் கோவில் யானையின் கடைசி நிமிட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் லஷ்மி எனும் கோவில் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இன்று காலை நடைபயிற்சியின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. யானையை பரிசோதித்த மருத்துவர்கள் இதய அடைப்பு ஏற்பட்டு திடீரென இருந்திருக்கலாம் என கூறினர்.

இந்த யானை லட்சுமி புதுச்சேரிக்கு 1998ம் ஆண்டு ஐந்து வயதில் அழைத்து வரப்பட்டது. தற்போது 33 வயதை கடந்துள்ளது. பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் யானை தினமும் காலை மாலை இருவேளை கோவிலில் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கி வந்தது. கோவில் யானை திடீரென இறந்த சம்பவம் புதுச்சேரி பக்தர்கள் மட்டுமல்லாமல் பிற மாநில பக்தர்களையும் வெளிநாட்டு வாழ் பக்தர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், லட்சுமியின் பிரிவை தாங்க முடியாமல் பாகன் சக்திவேல், கதறி அழும் காட்சிகள் பார்ப்போரின் கண்ணில் நீர் வரவழைக்கும் வகையில் இருந்தது.

இதனிடையே, நடைபயிற்சியின் போது உயிரிழந்த மணக்குள விநாயகர் கோவில் யானையின் கடைசி நிமிட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 1860

    1

    0