மின்கம்பத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்… சாமர்த்தியமாக செயல்பட்ட போலீஸ்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
24 May 2022, 1:12 pm

புதுச்சேரியில் இளைஞர் ஒருவர் மின்கம்பத்தின் மீது ஏறி தற்கொலை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி – ராஜீவ்காந்தி சதுக்கம் அருகே காலை மர்ம நபர் ஒருவர் மின்கம்பத்தின் மீது ஏறிக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார்.

சுமார் 10 நிமிட போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அந்த நபரை போலீசார் கீழே இறக்கி, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், தற்கொலை மிரட்டல் விடுத்த நபரின் பெரிய முதலியார்சாவடி பகுதியைச் சார்ந்த ஐயப்பன் (26) என்பதும், சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என தன்வந்திரி நகர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில் மின்கம்பத்தின் மீது ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி