மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஆவணி அஷ்வதி பொங்கல் விழா : தமிழக, கேரள பெண் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு..!!
Author: Babu Lakshmanan13 September 2022, 4:18 pm
கன்னியாகுமரி ; கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஆவணி அஷ்வதி பொங்கல் விழா, தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவை சேர்ந்த பெண் பக்தர்கள், இருமுடி கட்டுடன் வந்து அம்மனை தரிசித்து செல்வதால் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.
இந்த கோயிலில் 10-நாள் மாசி கொடை விழாவிற்கு பின் ஆவணி மாதம் அஷ்வதி பொங்கல் விழா நடைபெறும். இந்த வருட அஷ்வதி பொங்கல் விழா இன்று நடைபெற்ற நிலையில், இதனை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பொங்கலிடும் நிகழ்ச்சியினை மேகலை மகேஷ் துவக்கி வைத்தார்.
தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள், கோயில் முன் திரண்டு நீண்ட வரிசையில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தி, மண்டைக்காடு பகவதியம்மனை தரிசித்து சென்றனர்.