அனுமதியின்றி நடந்த எருது விழா… அவிழ்த்துவிடப்பட்ட 200க்கும் மேற்பட்ட காளைகள் ; மாடு முட்டியதில் ஒருவர் காயம்!!

Author: Babu Lakshmanan
19 January 2024, 11:15 am

வேலூர் அருகே அனுமதியின்றி நடந்த எருது விழா பங்கேற்று ஓடிய 200- க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், மாடு முட்டியதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பொங்கல் பட்டிகையையொட்டி வேலூர் மாவட்டம் கீழ்அரசம்பட்டு மற்றும் கோவிந்தரெட்டிபாளையத்தில் எருதுவிடும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இரண்டு இடங்களிலும் தலா நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின. எருது விடும் விழாவை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

ஒவ்வொரு கிராமத்திலும் எருது விடும் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் விதிமுறைகளை வகுத்துள்ளது. அதில் ஒன்று மனித உயிருக்கோ அல்லது முழு ஊனத்திற்கோ இழப்பீடு வழங்கும் வகையில் விழாக் குழுவினர் காப்பீடு செய்திருக்க வேண்டும்.

அப்படி காப்பீடு செய்திருந்தால் மட்டுமே விழா நடத்த அனுமதிக்கப்படும் என்ற விதி உள்ள நிலையில், தற்போது நடைபெற்ற கீழ் அரசம்பட்டு மற்றும் கோவிந்தரெட்டி பாளையம் ஆகிய இரண்டு இடங்கள் காப்பீடு செய்யாததால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அனுமதியை மீறி எருது விடும் விழா நடைபெற்றது.

கோவிந்தரெட்டிபாளையத்தில் அனுமதியின்றி நடைபெற்ற எருது விடும் விழாவில் காளை முட்டியதில் சுப்பிரமணி என்பவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். கீழரசம்பட்டில் நடைபெற்ற விழாவில் ஒரு காலை மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  • vasanthabalan apologize for the character portrayed in his veyil movie வெயில் படத்துல அப்படி பண்ணிருக்கக்கூடாது- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்…