உதகை தாவரவியல் பூங்காவில் களைகட்டிய காணும் பொங்கல்… பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்த உள்ளூர் மக்கள்…!!!

Author: Babu Lakshmanan
17 ஜனவரி 2024, 4:59 மணி
Quick Share

உதகை தாவரவியல் பூங்காவில் களைகட்டிய காணும் பொங்கல் விழாவில் நீலகிரியில் உள்ள மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசையுடன் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகளும் நடனமாடி மகிழ்ந்தனர்.

உதகை தாவரவியல் பூங்கா மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் மு.அருணா முன்னிலையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.

இதை தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சி நீலகிரி மலையில் வாழக்கூடிய தோடர், படுகர் மக்கள் தங்களது பாரம்பரிய உடையுடன் இசைக்கு நடனமாடினர்.

அப்போது, சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் மலைவாழ் மக்களுடன் நடனமாடி மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற உறியடி போட்டியில் அமைச்சர் கா .ராமச்சந்திரன் உட்பட சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உறியடித்து மகிழ்ந்தனர்.

உதகைக்கு வந்த சுற்றுலா பயணிகள் காணும் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு ஆடி பாடி மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 1076

    0

    0