பொங்கல் பரிசுடன் ₹2,000 ரொக்கம்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு?!!

Author: Udayachandran RadhaKrishnan
2 January 2025, 7:55 pm

பொங்கல் பண்டிகையையொட்டி 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு இடம்பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதன்வழி, சம்பந்தப்பட்ட ரேசன் கடைகளில் டோக்கன்கள் வழங்கப்படும் நடவடிக்கை நாளை (ஜனவரி 3) தொடங்கப்படுமென தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்க: திமுக அரசு நடந்து கொள்ளும் விதம் சரியில்லை.. கூட்டணியில் உள்ள காங்., எம்பி எதிர்ப்பு!

இது தொடர்பாக, அனைத்து மாவட்டங்களிலும் டோக்கன் அச்சடிப்பது முடிந்து விட்டது. நாளை முதல், ரேசன் கடை ஊழியர்கள் வீடு வீடாக டோக்கன்களை வழங்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

இதற்கிடையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2000 ரொக்கத் தொகை வழங்கக் கோரி பாஜகவின் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், தேர்தல் நேரங்களில் மட்டும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2000 ரொக்கத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான விசாரணை விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 47

    0

    0

    Leave a Reply