அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில்பாலாஜி பதவிகளை பறிக்க வேண்டும் : திடீரென வந்த எதிர்ப்பு குரல்!
Author: Udayachandran RadhaKrishnan12 April 2025, 7:57 pm
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில்.
தி.மு.க., ஆட்சி எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி பெண்களை போற்றும் ஒரே கட்சி அ.தி.மு.க.,தான். தமிழகத்தை ஆண்ட இரு பெண்மணிகளான ஜானகி, ஜெயலலிதா இருவரும் அ.தி.மு.க.,வினர் என்பதே அதற்கு சாட்சி. தி.மு.க.,வில் யாராவது ஒரு பெண் முதல்வர் இருந்தார்களா என கேள்வி எழுப்பினார்.
இதையும் படியுங்க: டிராலி சூட்கேஸில் காதலி… பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் அழைத்து சென்ற காதலனின் விநோத முயற்சி : டுவிஸ்ட்!
அதுமட்டுமில்லாமல், கடந்த, 1998ல் பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீட்டுக்காக குரல் கொடுத்தது, உள்ளாட்சி அமைப்புகளில், 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது என அனைத்தையும் செய்தது, அ.தி.மு.க.
ஆனால் ஊழல் வழக்கிலும், பல்வேறு குற்ற வழக்குகளிலும் சம்பந்தப்பட்டு அமைச்சர் பதவிகளை இழந்து ஜாமீன் பெற்று வந்த செந்தில் பாலாஜி, பொன்முடி போன்றோருக்கு மீண்டும் அமைச்சர் பதவியை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.

இவர்களை போன்றவர்களால் தி.மு.க.,வே அழிந்துவிடும். பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்தவர், ஒரு பேராசிரியர் கட்சியில் துணை பொதுச்செயலாளராக இருந்த பொன்முடி பெண்களை அவமதிக்கும் வகையிலும், காம இச்சை எனவும் பேசி உள்ளார்.
அவரை கட்சி பதவியிலிருந்து மட்டும் நீக்கியுள்ளனர். ஆனால் அவர் வகிக்கும் அரசு பதவியான அமைச்சர் பதவியிலிருந்தும் அவரை நீக்க வேண்டும். அப்போது தான் மக்கள் ஏற்பார்கள்.
பொன்முடி, செந்தில்பாலாஜி போன்றோரை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அனைவரும் மிகவும் வேதனை கொள்கின்றனர். தி.மு.க., அரசை தூக்கி எறியவும் தயாராகி விட்டனர் என கூறினார்.