யோ நான் பேசிட்டு தானே இருக்கேன்… அமைச்சர் மஸ்தானை ஒருமையில் பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பொன்முடி!!
Author: Udayachandran RadhaKrishnan18 May 2023, 8:39 am
கள்ளச்சாரய விவகாரம் காசோலை வழங்கச் சென்றபோது அமைச்சர் செஞ்சி மஸ்தானை ஒருமையில் பேசியதால் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் அமைச்சர் பொன்முடி.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியர் குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிரிழந்த 12 குடும்பங்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் சென்று காசோலைகளை வழங்கினர்.
அப்போது உயிரிழந்த சங்கர் என்பவரது வீட்டிற்கு சென்று காசாலை வழங்கிய போது அருகில் இருந்த மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி மற்றும் அமைச்சர் மஸ்தான் ஆகியோர் காசோலையை வழங்குங்கள் என கூறியதற்கு ‘யோ என்னயா நான் பேசிட்டு தானே இருக்கேன்’ என்று ஒருமையில் பேசியது அங்கிருந்தவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.