பொன்னையன் ஒரு பைத்தியக்காரர்.. கே.பி.முனுசாமிக்கு டெண்டர் ஏன்? கோவையில் அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 July 2022, 2:34 pm

கோவை : அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் ஒரு பைத்தியக்காரன் என அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் தடுப்பூசிகளை போட்டுள்ளார் ; விரைவில் நலமடைந்து வருவார் என தெரிவித்தார்

பொன்னையன் பேசிய ஆடியோ விவகாரம் தொடர்பாக கேட்டபோது பொன்னையன் முன்பைப் போல இல்ல, பைத்தியக்காரன் போல எதையாவது கூறிக் கொண்டிருக்கிறார் என பதிலளித்தார்

கேபி முனுசாமி குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவருடைய குவாரிக்கு ஏற்கனவே சீல் வைத்துள்ளோம் சமீபத்தில் நடைபெற்ற டெண்டர் ஒன்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்து ஒரு குவாரியை பெற்றுள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!