ரிலீசுக்கு முன்பே பொன்னியின் செல்வன்- ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இத்தனை கோடி வசூலா?

Author: Vignesh
26 September 2022, 1:07 pm

தமிழ் சினிமா ரசிகர்கள் பெருமை கொள்ளும் அளவிற்கு படு பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது பொன்னியின் செல்வன். பல கோடி மக்கள் படித்து ரசித்த கல்கி எழுதிய இந்த பொன்னியின் செல்வன் கதையை அடித்துக்கொள்ள இதுவரை வேறு எந்த கதையும் வந்ததில்லை.

இந்த பிரம்மாண்ட கதையை இப்போது படமாக இயக்கி பாதி சாதனை படைத்துவிட்டார் மணிரத்னம். படம் ரிலீஸ் ஆகி மக்களிடம் சென்றுவிட்டால் முழு சாதனையை அடைந்துவிடுவார் இயக்குனர்.

வரும் செப்டம்பர் 30ம் தேதி படம் 5 மொழிகளில் ரிலீஸ் ஆகிறது, ரசிகர்களும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். எந்த அளவிற்கு என்றால் ப்ரீ புக்கிங் திறந்த உடனே சில மணி நேரத்தில் முடிந்துவிடுகிறது.

இதுவரையிலான வசூல் ப்ரீ புக்கிங் தொடங்கி இதுவரை உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 15-கோடி வரை வசூல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?