பொன்னியின் செல்வன் 1 Review: படம் எப்படி இருக்கு..? அனல் தெறிக்கும் அறிமுக காட்சி… PS 1 டிவிட்டர் விமர்சனம்..!

Author: Vignesh
30 September 2022, 10:15 am

பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் படம் பாஸிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இத்திரைப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெங்குலு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.

காலை 4 மணிக்கே சிறப்பு காட்சி தொடங்கியது. படத்தை பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும் படம் குறித்த தங்களின் அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சினிமா விமர்சகரான பிரசாந்த் ரங்கசாமி பதிவிட்டுள்ள டிவிட்டில் பொன்னியின் செல்வன் நமது பெருமை என குறிப்பிட்டுள்ளார்.

கவுஷிக் ராஜாராமன் பதிவிட்டுள்ள டிவிட்டில் #பொன்னியின் செல்வன்1 இரண்டாம் பாதி : #மணிரத்னத்தின் காவியத்திற்கு ஒரு காவியம். சோழ சாம்ராஜ்ஜியத்தின் அவரது சித்தரிப்பு சினிமா வடிவம் பெறுவதைக் கண்டு கல்கி மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்.. என குறிப்பிட்டுள்ளார்.

படத்தை பார்த்த இந்த நெட்டிசன் பதிவிட்டிருப்பதாவது, படத்தில் தேவையில்லாத போர் மற்றும் மாஸ் காட்சிகள் இல்லை. முழுக்க கதையை அடிப்படையாக கொண்டுள்ளது. டெக்னிக்கல் டீம்முக்கும் படக்குழுவுக்கும் ஹேட்ஸ் ஆஃப். ஏஆர் ரஹ்மான் கால் லெவல் மியூஸிக்.. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா டாப் நாட்ச் ஆக்டிங் என குறிப்பிட்டுள்ளார்.

ரிச்சர்ட் மகேஷ் பதிவிட்டுள்ள இந்த டிவிட்டில் ஒட்டுமொத்தமாக பொன்னியின் செல்வன் மணிரத்னம் மற்றும் அவரது குழுவின் விஸ்வல் ட்ரான்ஸ்லேஷனுக்கான பிரிலியன்ட் அட்டம்ப்ட். இறுதி கிரெடிட் டிவிஸ்ட் நம்மை பொன்னியின் செல்வன் 2க்கு தயாராக்கும். பொன்னியின் செல்வன் அமேஸின் அனுபவம் என குறிப்பிட்டுள்ளார்.

சினி முருகன் என்பவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், #பொன்னியின் செல்வன்1 – சரித்திரக் கதை, #மணிரத்னத்தின் சிறந்த படம். அனைத்து நட்சத்திரங்களின் நடிப்பும் சிறப்பாக உள்ளது. #ஏ.ஆர்.ரஹ்மான் இசை மேஜர் பிளஸ். ஆனால் மெதுவான திரைக்கதை. #PS வரலாறு தெரிந்தவர்கள் படத்தை நன்றாக புரிந்து கொள்வார்கள். தீர்ப்பு: காட்சி விருந்து என தெரிவித்துள்ளார்.

லக்ஷ்மி காந்த் பதிவிட்டுள்ள டிவிட்டில் பலர் புத்தகத்தைப் படித்தது/கேட்டது போல் தெரிகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நகரத்தின் பெயருக்கும் கூட பதில் கிடைக்கும். #மணிரத்னத்திடமிருந்து ஒரு சரியான சரித்திர விளக்கக்காட்சி… இந்த படத்தை மற்ற மாநில மக்கள் எப்படி வரவேற்பார்கள் என்று காத்திருக்கிறேன்.. #PonniyinSelvan #PonniyinSelvan1 என குறிப்பிட்டுள்ளார்.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!