என்ன படம் இது..? ஏன்.. சோழ பெண்களுக்கு கற்பு இல்லையா..? பொன்னியின் செல்வன் படம் குறித்து பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்..!

Author: Vignesh
1 October 2022, 12:30 pm

பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம் , பிரகாஷ் ராஜ் என பெரும் நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருப்பதாக படத்தை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் நாவலை படிக்காதவர்களுக்கும் படம் புரியும் வகையில் இருப்பதாகவும் முதல் பாதியை விட இரண்டாவது பாதியில் விறுவிறுப்பு அதிகம் என்றும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படம் குறித்த தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன். அதில் அவர் கூறியிருப்பதாவது, அரச நிர்வாகத்தில் பெண்களின் தலையீடு இருந்துள்ளது இப்படத்தில் தெரிகிறது. பெண்கள் காதலிப்பது ஒருவராகவும் கல்யாணம் செய்து கொள்வது ஒருவராகவும் இருந்துள்ளனர்.

இந்தப் படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி நடித்துள்ளார். வந்தியத் தேவன் பெண்களை கவருபவராகவும், அதே சமயம் பெண்களை மதிப்பவராகவும் உள்ளார். அரசகுல பெண்கள் கூறும் வேலைகளையும் செய்து வருகிறர். ஆதித்த கரிகாலனாக விக்ரம் அருமையாக சண்டை போடுகிறார். ஆதித்த கரிகாலனின் வீரம் தெரிகிறது.

பெரிய பழுவேட்டரையராக சரத்குமாரின் நடிப்பு கம்பீரமாக உள்ளது. சித்து விளையாட்டுக்களிலும் சிறந்தவராக உள்ளார். பிரகாஷ் ராஜின் காட்சிகளில் அவர் குப்புற படுத்துள்ளார். அவருக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வலிகளை பொறுத்துக்கொண்டு அரச வேலைகளை செய்கிறார். அவருடைய நடிப்பும் கம்பீரமாக உள்ளது.

அடுத்து ஐஸ்வர்யா ராயும் த்ரிஷாவும் அழகாக இருக்கிறார்கள். இருவரும் நடிப்பால் போட்டி போட்டுக் கொண்டு வசப்படுத்துகிறார்கள். ஐஸ்வர்யா ராய் நந்தினியாக சோகத்தை தாங்கி கொண்டு நிற்கிறார்.

பார்வைகளாலே உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார். இறுதியில் ஐஸ்வர்யா ராய் முழுக்க மனதில் நிற்கிறார். த்ரிஷாவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அண்ணனுக்கே எதிராக செயல்படுகிறார். அந்த காலத்தில் பெண்கள் அரசருக்கு தெரியாமலேயே நிர்வாகத்தில் தலையிட்டுள்ளனர் என்பது தெரிகிறது

சோழர் கால பெண்கள் காதலுக்கு வலை வீசுவது போல் காட்சிகள் அமைத்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தில் சோழர் கால கம்பீரத்தை பாருங்கள் என்று சொல்லலாமே தவிர, சோழர் கால பெண்களின் கற்பை பாருங்கள் என சொல்லமுடியாத அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்” என காட்டமாக கூறியுள்ளார்.

அந்த கால பெண்கள் கற்பு என்ற விஷயத்தில் எப்படி இருந்திருக்கிறார்கள் என்பது படத்தை பார்த்தால் புரியும். அதை விமர்சிக்க முடியாது. அடுத்ததாக படத்தில் காமெடி என்றால் ஜெயராம்தான். ஆழ்வாருக்கு அடியான் நம்பி என்ற கதாப்பாத்திரத்தில் நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பதை போல கலகலப்பாக நடித்துள்ளார். படத்தில் காமெடி என்றாலே கார்த்தியும் ஜெயராமும்தான்.

ரவி வர்மாவின் ஒளிப்பதிவு அருமையாக உள்ளது. தோட்டா தரணியின் கலையும் அருமை. அந்தக் காலத்தில் உள்ள அரங்குகளை பிரமாண்டமாக அமைத்து கண்ணுக்கு விருந்தளித்துள்ளார். படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். புராதன படங்களில் உள்ள இசை இல்லை. பாடல்கள் சரித்திர படங்களுக்கு ஏற்றது போல் இல்லையோ என்று தோன்றுகிறது. வார்த்தைகள் கேட்கவில்லை என்ற குறையை சொல்லித்தான் ஆகவேண்டும்.

ஜெயமோகன் சிறப்பாக தனது வேலையை செய்திருக்கிறார். மணிரத்னம் எப்போதும் சுஜாதாவைதான் பயன்படுத்துவார். அவரது மறைவுக்கு பிறகு அவருடைய வேலையை சிறப்பாக செய்திருக்கிறார் ஜெயமோகன். மணிரத்னம் திரைக்கதையை அமைக்க சிரமப்பட்டிருக்கிறார்.

Maniratnam - Updatenews360

பொன்னியின் செல்வனில் பல கதாப்பாத்திரங்கள் உள்ளன அவற்றை சொல்ல வேண்டும் என்றால் கஷ்டம். மணிரத்னம் ரொம்ப கஷ்டப்பட்டுள்ளார். 3 பெண்களுமே ராணிகளாகவும் இளவரசிகளாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். நடனம் கேரளத்து நடனம் போல் உள்ளது. இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 531

    0

    0