அதிர்ச்சி அடைந்த பூஜா ஹெக்டே.. விமான நிலையத்தில் என்ன நடந்தது..?

Author: Rajesh
17 May 2022, 1:58 pm

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார். இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது.

சமீபத்தில் இவர் நடித்து தெலுங்கில் வெளியான ஆச்சார்யா, தமிழில் பீஸ்ட் படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. சமீபத்தில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் ஜெட் ஓட்டும் காட்சிகளை கலாய்த்து வருகின்றனர்.

தற்போது பூஜா ஹெக்டே கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க இருக்கிறார். அங்கு செல்வதற்காக அவர் மும்பை விமான நிலையம் வந்த போது அவருக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்திருந்தது.

அவர் காரை விட்டு இறங்கியதும் அங்கு ரசிகர்கள் கூட்டமாக நின்று அவரை வாழ்த்தி பேனர் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். அதை பார்த்து அவருக்கு இன்ப அதிர்ச்சி தான். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி