பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர்.. நிரம்பிய பூண்டி ஏரி.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Author: Hariharasudhan
12 December 2024, 4:24 pm

சென்னையில் பெய்து வரும் மழையால் பூண்டி ஏரி நிரம்பியதால் கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டு உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நேற்று இரவு முதலே சென்னையின் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால், வேளச்சேரி 100 அடி சாலை, அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நதி நீர் ஆகியவை முக்கிய நீர் ஆதாரங்களாக பார்க்கப்படுகிறது.

Poondi lake water released

இந்த நிலையில் தான், ஃபெஞ்சல் புயல் (Fengal Cyclone) மற்றும் தற்போது பெய்துவரும் மழை காரணமாகவும் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதில், ஏற்கனவே கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி முதல் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டு வரும் கிருஷ்ணா நதி நீர், விநாடிக்கு 300 கன அடி என்ற வீதத்தில் வந்து கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: இரவிலே நடந்த இரண்டு சம்பவங்கள்.. ‘சந்திரபாபு நாயுடு இதனை விவாதிக்க வேண்டும்’.. ஆந்திராவில் அதிர்ச்சி!

இவ்வாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக விநாடிக்கு 990 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், பூண்டி ஏரியின் மொத்தக் கொள்ளளவான 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடியில் 2 ஆயிரத்து 839 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மேலும், மொத்த உயரமான 35 அடியில் 34.05 அடி நீர் மட்டம் உள்ளது.

Poondi lake water released

இந்த நிலையில், பூண்டி ஏரி 88 சதவீதம் நிரம்பி உள்ளது. இதனால் நீர் வரத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் நீர்வள ஆதாரத் துறையினர், இன்று (டிச.12) பிற்பகல் 1.30 மணியளவிில், வினாடிக்கு ஆயிரம் கன அடி உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விட்டு உள்ளனர்.

இவ்வாறு உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளதாகல், கொசஸ்தலை ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நீர் வள ஆதாரத் துறையினர் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை ஏற்கனவே விடுத்துள்ளனர். தற்போதும், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  • Director Shankar Dayal passes away “சகுனி” பட இயக்குனர் திடீர் உயிரிழப்பு…சோகத்தில் உறைந்த திரையுலகம்..!
  • Views: - 113

    0

    0

    Leave a Reply