பிரபல A2B கடையில் காலாவதியான ஸ்வீட்ஸ் விற்பனை.. குழந்தை சாப்பிடும் முன் கவனித்த வாடிக்கையாளர்!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2024, 5:49 pm

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய காஞ்சிபுரம் ராயன்குட்டை தெரு பகுதியை சார்ந்தவர் ஹரி கிருஷ்ணன்.

மாநகராட்சி ஒப்பந்ததாரான இவர் தனது உறவினர் ஒருவரின் குழந்தைக்கு பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் நெல்லுக்கார தெரு பகுதி உள்ள பிரபல இனிப்பகமான A2B எனப்படும் அடையார் ஆனந்தபவனில் வியாழக்கிழமை காலை பல்வேறு இனிப்புகள் அடங்கிய பெட்டகத்தினை 760ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றுள்ளார் .

இந்நிலையில் SWEETEST BLIS என்கிற தொகுப்பு இனிப்பு பெட்டகம் 27 ஆம் தேதியுடன் முடிவதாக குறிப்பிடப்பட்டிருப்பதை கண்டு வாடிக்கையாளர் ஹரி கிருஷ்ணன் அதிர்ச்சியடைந்தார்.

பிரபல இனிப்பகத்தில் காலாவதி தேதி கடந்த பின்னரும் ஏராளமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதும் , விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டு உள்ளதையும் கண்டு வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி உற்றனர்.

குழந்தைக்கு வாங்கி சென்ற இனிப்பு காலாவதியானது குறித்து ஹரிகிருஷ்ணன் கடையில் கேட்டபோது , கடை ஊழியர்கள் மிக அலட்சியமாக பேசியதால் அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் கிளை மேலாளரை அணுக முயன்ற போது கடைசி வரை அணுக முடியாதால் இவை குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்துக்கொள்வதாக கூறி வாடிக்கையாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்களும் திரும்பி சென்றனர்.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ