விக்ரம் பட இசை வெளியீட்டு விழாவில் இவரா.? அப்போ செம மாஸா இருக்கும்ல..!
Author: Rajesh12 May 2022, 2:48 pm
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உலகநாயகன் கமல் ஹாசன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.
இப்படத்தின் First சிங்கிள் நேற்று மாலை வெளிவந்தது. இந்த பாடலை கமல் ஹாசனே எழுதி பாடியிருந்தார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வருகிற 15ஆம் தேதி வெளியாகிறது. பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு திரையுலக சேர்ந்த பலரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பாரக்கப்படுகிறது.

இந்நிலையில், முன்னணி நடிகரும், கமல் ஹாசனின் நெருங்கிய நண்பருமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் இந்த விழாவில் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், மறுபுறம் ரஜினி வெளிநாடு செல்லவிருப்பதால், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது சந்தேகம் தான், என்பதும் கூறப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.